-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பென்னி ஹின் - தனது தந்தையின் அடக்க ஆராதனையில் சுவிஷேசம் பிரசங்கித்த கதை




எங்களுடைய சொந்தக்காரர்களில் பெரும்பாலானோர் இன்னும் கிரேக்க ஆர்தோடாக்ஸ் திருச்சபையைச் சார்ந்தவர்களாய்  இருந்தபடியால், என் தந்தையின் அடக்க ஆராதனையை அந்தத் கிருச்சபையின் முறைமையின் படியே நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தனது அன்பான கணவனுக்கு இதுவே ஏற்ற மரியாதையாயிருக்கும் என்று என் தாய் இந்த முடிவை எடுத்தார்.


சபையின் பாதிரியாரை என் தாய் சந்தித்து, "ஆராதனையின் முதல் பகுதியை நீங்கள் நடத்திவிட்டு, இரண்டாம் பகுதியை என் மகன் பென்னியிடம் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இந்த வேண்டுகோளுக்குப் பாதிரியார் மறுப்பு தெரிவித்தபோது இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் ,என்று சொல்லி அவரது ஒப்புதலைப் பெற்றார்.


நண்பர்களும் உறவினர்களுமாக சுமார் முந்நூறுபேர் கிரேக்க ஆரதோடாக்ஸ் திருச்சபையில் நடந்த அடக்க ஆராதனைக்கு கூடி வந்தனர். என் தந்தையின் உடல் படத்தண்டையின் முன்னால் வைக்கப்பட்டிருந்தது.


வைக்கப்பட்ட பெட்டி பாரம்பரியத்தின்படி எப்படி அடக்க ஆராதனை நடக்க வேண்டுமோ அவை அனைத்தையும் முடித்துவிட்டு, மீதமுள்ள பகுதியை என்னிடம் அந்தப் பாதிரியார் கொடுத்தார்.


நான் வேதாகமத்தைத் திறந்து இரட்சிப்பு பற்றி சாதாரணமான சிறு பிரசங்கத்தைச் செய்தேன்.நான் அங்கு  அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, "என் தந்தை அந்தப் பெட்டியில் இல்லை. அது வெறும் கூடுதான்” என்று சொல்லி, "தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனே கூட." என்ற வேத பகுதியை எடுத்து வாசித்தேன்.



பிரசங்கத்தின்போது, ஒரு சமயத்தில், நான் சவப்பெட்டியின்
அருகே போய் என் தந்தையின் உடலை ஓங்கிக் குத்தியவாறே "அவர்
இதிலே இல்லை! இயேசுவோடு இருக்கும்படி போய்விட்டார்” என்று
ஆணித்தரமாகச் சொன்னேன்.


ஆராதனைக்கு வந்திருந்த அனைவரும் இதைக்கேட்டு
திகைத்துப்போய் என்னைப் பார்த்தனர். பாதிரியார் செய்வதறியாது
உட்கார்ந்திருந்தார். அலர் உள்ளுக்குள் வெலவெலத்துப் போயிருப்பது
அவர் முகத்தில் வெளிப்பட்டது.


என் தாய், சூசன் மற்றும் என் சகோதர சகோதரிகள் யாவரையும்
நான் முன்னால் வருமாறு அழைத்து சவப் பெட்டியைச் சுற்றி நிற்கச்
செய்தேன். அப்படியே நாங்கள் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து
தேவனைத் துதிக்க ஆரம்பித்தோம். கண்களை மூடிக் கரங்களை
உயர்த்தியிருந்த நாங்கள் ஒருமித்து "என் ஆன்மா பாடும், இரட்சகா
தேவா, நீர் எத்தனை பெரியவர்! நீர் எத்தனை பெரியவர்” என்ற
பாடலைப் பாடி முடித்தோம்.


நான் கண் திறந்து பார்த்தபோது, சபையார் எல்லாரும், திகைத்துப்
போயிருப்பதைக் கண்டேன்.அவர்களில் சிலர் அழுது கொண்டிருந்தார்கள். இயேசுவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்களை முன்னே வர அழைக்கும்படி நான் ஏவப்பட்டபடியால், நான் கூடியிருந்தவர்களை நோக்கி, "நான் சொன்ன இந்த இயேசுவை நீங்களும் இதே போல் அறிய விரும்பினால் தயவு செய்து எழுந்து முன்னே வாருங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன் என்றேன்.


என் சித்தப்பா பிள்ளைகள் இருவர் உட்பட என் தந்தையின்
சிநேகிதர் பலரும் அன்று இயேசுவை ஏற்றுக் கொண்டனர்.


என்னுடைய ஊழிய நாட்கள் எல்லாவற்றிலும் இந்த நாளைத்
தான் நான் மகுடம் சூட்டிய நாளாகக் கருதுகிறேன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்